For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கனிம சுரங்கங்கள் அமைக்க பொதுமக்கள் கருத்துக்கேட்பிலிருந்து அளிக்கும் ஆணையை திரும்பப் பெறுக - சீமான் வலியுறுத்தல்!

கனிம அகழ்வுத் திட்டங்களுக்குப் பொதுமக்கள் கருத்துக்கேட்பிலிருந்து விலக்கு அளிக்கும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் குறிப்பாணையைதிரும்பப் பெற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
05:58 PM Sep 12, 2025 IST | Web Editor
கனிம அகழ்வுத் திட்டங்களுக்குப் பொதுமக்கள் கருத்துக்கேட்பிலிருந்து விலக்கு அளிக்கும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் குறிப்பாணையைதிரும்பப் பெற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
கனிம சுரங்கங்கள் அமைக்க பொதுமக்கள் கருத்துக்கேட்பிலிருந்து அளிக்கும்  ஆணையை திரும்பப் பெறுக   சீமான் வலியுறுத்தல்
Advertisement

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

Advertisement

”அணு தொடர்பான கனிமங்களான அரிய மண் தனிமங்கள் (REEs), யுரேனியம் மற்றும் தோரியம் போன்றவற்றின் அகழ்வுத் திட்டங்களுக்கு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிவிக்கை, 2006இன் கீழ் உள்ள பொதுமக்கள் கருத்துக்கேட்புத் தேவையிலிருந்து விலக்கு அளிக்கும் வகையிலான ஆணையை ஒன்றிய அமைச்சகம் கடந்த 08.09.2025 அன்று வெளியிட்டுள்ளது. 

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிவிக்கை, 2006, பாதிக்கப்படும் மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதற்குக் கருத்துக்கேட்பினைக் கட்டாயப்படுத்துகிறது. இது திட்ட ஒப்புதல்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் அரசின் பொறுப்புகளை உறுதி செய்கிறது. இது பெரும்பாலும் சுற்றுச்சூழல் அபாயகரமான திட்டங்களில் மாற்றங்களை செய்ய அல்லது நிராகரிக்க வழிவகுக்கிறது. இந்த அகழ்வுத் திட்டங்களுக்கு விலக்கு அளிப்பதன் மூலம், தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆணை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிவிக்கையை செயலற்றதாக்குகிறது.

2020ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையில் சட்ட திருத்தம் முன்மொழியப்பட்ட போது நாடுதழுவிய எதிர்ப்புக்குரல்கள் வந்தது. நாம் தமிழர் கட்சியும் அந்த வரைவுக்கு எதிரான மாநிலம் முழுமைக்குமான போராட்டங்களை முன்னெடுத்ததோடு, ஒன்றிய அமைச்சகத்திடம் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல் கருத்துப்பதிவுகளை செய்தது. அந்த சட்டத்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆணைகளின் வழியே மறைமுகமாக மீண்டும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை ஒன்றிய பாஜக அரசு பலவீனப்படுத்துகிறது.

இந்த ஆணை திட்டங்களுக்கான வன அனுமதிகளை எளிதாக்குகிறது, மேலும் காடழிப்பு மற்றும் வாழ்விட இழப்புக்கு எதிரானப் பாதுகாப்புகளைப் பலவீனப்படுத்துகிறது. இது போன்ற படிப்படியான நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கைகள் பெரும்பாலும் மக்களின் ஆலோசனையின்றி நேரடி ஆணையாக வெளியிடப்படுகின்றன.

 மக்கள் எதிர்ப்பை அமைதிப்படுத்துவதன் மூலமும், தொழில்துறை நிறுவனங்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும், அவர்களின் தனிநபர் நலனுக்கான வகையில் ஒன்றிய பாஜக அரசு இவ்வழிவகை செய்திருப்பது மக்களாட்சி மாண்பை காலில் போட்டு மிதிக்கும் கொடுங்கோன்மையாகும். தொடர்ச்சியாக சூழலியல் விதிகளை சீரழித்துக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் திட்ட அனுமதிகளை வழங்கி, இயற்கை வளங்களை அழித்தொழிக்கும் போக்கினை ஒன்றிய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், தற்போது வெளியிட்டுள்ள அலுவலக குறிப்பாணையினைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement