For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் | இன்று திமுக எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளும், கோரிக்கைகளும்!

09:40 PM Dec 13, 2024 IST | Web Editor
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்   இன்று திமுக எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளும்  கோரிக்கைகளும்
Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இன்று திமுக எம்பிக்கள் முன்வைத்த கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பார்க்கலாம்.

Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று (டிச. 13) நடைபெற்ற கூட்டத்தில் திமுக எம்பிக்கள் வைத்த கோரிக்கைகளையும், மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு அவர்கள் தெரிவித்த கண்டனங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

செரலாக்கினால் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் அபாயமா? - தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கருணாநிதி கேள்வி!

குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரை சேர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி மக்களவையில் இன்று (டிச. 13) கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆறு மாதக் குழந்தைகளுக்கான உணவாக இந்தியாவில் விற்கப்படும் நெஸ்லே செரலாக் ஒரு ஸ்பூன் பவுடரில் 2.7 கிராம் சர்க்கரை இருப்பதாகவும் அதே உணவுப்பொருள் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் சர்க்கரை சேர்க்கப்படாமல் விற்கப்படுகிறது எனவும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது என்பதை குறிப்பிட்டு பேசிய அவர், மிக இளவயதில் குழந்தைகளுக்கு உடல் பருமன் மற்றும் நாட்பட்ட நோய்களை உண்டாக்கும் அபாயம் இருப்பதால் இரண்டு வயதுக்குமுன் குழந்தைகள் உணவில் சர்க்கரை சேர்க்க வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவுறுத்துகிறது. அதன் அடிப்படையில் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சேர்க்கப்பட்ட சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மட்டுமல்லாமல் உலகளாவிய சுகாதாரப் பரிந்துரைகளுக்கு இணங்க குழந்தைகளுக்கான உணவுகள் தயாரிக்க தரநிலைகளை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

நீதிபதி சேகர் குமார் யாதவை பதவிநீக்கம் செய்க! - திமுக எம்.பி. பி.வில்சன் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குழு மாநிலங்களவையில் தீர்மானம் தாக்கல்!

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவை பதவிநீக்கம் செய்யக்கோரும் தீர்மானத்தை திமுக எம்.பி. பி.வில்சன் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குழு கபில் சிபல் தலைமையில் மாநிலங்களவை செயலாளரிடம் சமர்பித்துள்ளது. தீர்மானத்தை தாக்கல் செய்ய 50 எம்.பிக்களின் தேவை உள்ள நிலையில் 55 மாநிலங்களவை எம்.பிக்கள் இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

கடந்த ஞாயிறன்று உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் விஸ்வ இந்து பரிக்சத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று நீதிபதி சேகர் குமார் யாதவ் பேசியதற்கு எதிரிப்பு தெரிவித்து இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அவரது பேச்சு சிறுபான்மை சமூகங்களைக் நேரடியாக குறிவைப்பதாகவும் அவர்கள் மீது தப்பெண்ணத்தையும் வெறுப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும், அவரது பதவிபிராமண உறுதி மொழியையும் அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை பண்பையும் மீறிவிட்டததாகவும் தீர்மானம் குறிப்பிடுகிறது.

இதுபோன்ற பிளவுவாத, பாரபட்சமான கருத்துக்களைக் கூறியதன் மூலம் மக்களுக்கு நீதித்துறை மீதுள்ள நம்பிக்கையை நீதிபதி சேகர் சீர்குலைத்துள்ளார் எனத் தீர்மானத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள் 124 (4), 124 (5), 218, ஆகியவை நீதிபதிகள் ஒருதலைப்பட்சமாகவும், நீதித்துறை மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையிலும் செயல்பட்டால் அவர்களைப் பதவிநீக்க வழிவகை செய்கின்றன.

நீதிபதி சேகர் குமார் யாதவ் மீது உச்சநீதிமன்றத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குகளின் அடிப்படையில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அலகாபாத் உயர்நீதிமன்றத்திடம் அறிக்கை கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது."

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement