For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"வெற்றியோ, தோல்வியோ நாங்கள் உங்களை நேசிக்கிறோம்" - காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி

08:27 AM Nov 20, 2023 IST | Web Editor
 வெற்றியோ  தோல்வியோ நாங்கள் உங்களை நேசிக்கிறோம்    காங்கிரஸ் எம் பி  ராகுல்காந்தி
Advertisement

இந்திய அணி வீரர்களே, நீங்கள் போட்டியில் சிறப்பாக விளையாடினீர்கள்.  வெற்றியோ அல்லது தோல்வியோ, நாங்கள் உங்களை நேசிக்கிறோம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கூறியுள்ளார்.

Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லும் வாய்ப்பை ஆஸ்திரேலியாவிடம் தோற்று நழுவ விட்டது. குறிப்பாக லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி 10 வெற்றிகளை பெற்ற இந்திய அணியில் அனைத்து வீரர்களும் உச்சகட்ட ஃபார்மில் இருந்ததால் இம்முறை வெற்றி உறுதி என்று ரசிகர்கள் நம்பினர்.

ஆனால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோஹித் 47, விராட் கோலி 54, ராகுல் 66 ரன்கள் எடுத்த உதவியுடன் 241 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் 134, லபுஸ்ஷேன் 58 ரன்கள் எடுத்ததால் 43 ஓவரிலேயே எளிதாக வென்றது.

இதையும் படியுங்கள்:  ஒரு அதிகாரிக்காக ஆயிரம் பயணிகளை அலைக்கழித்த விவகாரம்! எம்.பி. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டுக்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம்!!

இதனால், இந்திய ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.  இத்தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு தலைவர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள். அந்த வகையில் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் இந்திய அணிக்கு ஆறுதல் தெரிவித்து கூறியுள்ளதாவது: "இந்திய அணி வீரர்களே. நீங்கள் போட்டியில் சிறப்பாக விளையாடினீர்கள். வெற்றியோ அல்லது தோல்வியோ, நாங்கள் உங்களை நேசிக்கிறோம். அடுத்து வருவதை நாம் வெல்வோம். உலகக் கோப்பை வெற்றிக்கு தகுதியான ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்." என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement