For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டி - ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் கார்லஸ் அல்காரஸ்!

09:42 PM Jul 14, 2024 IST | Web Editor
விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டி   ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் கார்லஸ் அல்காரஸ்
Advertisement

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் 3-0 என்கிற நேர் செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

Advertisement

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதி சுற்றில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.  இதில் கார்லோஸ் அல்காரஸ் 3-1க்கு என்கிற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இந்த நிலையில் விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இன்று நடைபெற்றது. உலகின் 2 ஆம் நிலை வீரரான ஜோகோவிச் மற்றும் உலகின் 3ஆம் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ் ஆகியோர் மோதினர்.

இறுதிப் போட்டியில் முதல் இரண்டு செட்களை 6-2, 6-2 என அடுத்தடுத்து கைப்பற்றிய அல்காரஸ் மூன்றாவது செட்டை 7-6(7-4) என கைப்பற்றி அசத்தினார்.  இதன் மூலம் இறுதிப் போட்டியில் 3-0 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் ஐ வீழ்த்தி கார்லோஸ் அல்காரஸ் அபார வெற்றி பெற்றார்.

விம்பிள்டன் இறுதிப் போட்டியில் அல்காரஸ் வென்றதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.  இதன் மூலம் 21 வயதில் 2 முறை அடுத்தடுத்து விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற 3 வது வீரர் என்ற பெருமையை அல்காரஸ் பெற்றுள்ளார்.

Tags :
Advertisement