என்னது ஒரு கப் காபிக்கு ரூ.300 கொடுக்கனுமா ? வைரலாகும் #Reddit பதிவு!
விமான நிலையத்தில் பயணி ஒருவர் எதிர் கொண்ட ஒரு மோசமான அனுவத்தை ரெடிட்டில் பகிர்ந்துள்ளார்.
டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1ல் இருந்து தனது விமானத்தில் ஏறவிருந்த பயணி ஒருவர், அதிகப்படியான உணவு விலைகள் மற்றும் விமான தாமதம் காரணமாக தனது வாழ்க்கையின் "மோசமான விமான அனுபவத்தை" பெற்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பயணி ஒருவர், ஓய்வறையை அணுகுவதற்காக விமான நிலையத்தை சீக்கிரம் அடைந்ததாகப் பகிர்ந்து கொண்டார். இருப்பினும், பயன்படுத்தத் திட்டமிட்டிருந்த ஓய்வறை புதுப்பிப்பதற்காக மூடப்பட்டிருப்பது அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பயனர் பின்னர் உணவுக் கடைகளில் ஒன்றில் சாப்பிட முடிவு செய்தார். ஆனால் உணவுப் பொருட்களின் விலையை பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் ரெடிட்-ல் தெரிவிப்பதாவது:
"காலை 10:30க்கு திட்டமிடப்பட்டிருந்த எனது விமானத்தைப் பிடிக்க நான் டெல்லி விமான நிலையத்தின் T3 முனையத்திற்கு வந்தேன். லவுஞ்சை (ஓய்வறையை ) பயன்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கையில் நான் சீக்கிரமாக வந்தேன், ஆனால் லவுஞ்ச் புதுப்பிக்கப்படுவதால் அதை அணுக வழி இல்லை. ஆனால் அது மிகவும் மோசமானதல்ல, நான் உணவுக் கடை ஒன்றில் சாப்பிட சாப்பிட முடிவு செய்தேன்.
"இங்கே விஷயம் என்னவென்றால், முழு டெர்மினலிலும் 3 உணவுக் கடைகள் மட்டுமே உள்ளன, அவை அதிக விலை கொண்டவை, மெனுவின் சில உதாரணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
டீ - ₹ 200
காபி - ₹ 300
ராஜ்மா - ₹ 400
பர்கர் - ₹ 300
வடை - ₹ 300
எனது ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், பயணிகள் ஏறிய பிறகும் விமானம் புறப்பட 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. பின்னர் மதியம் 12:30 மணியளவில் பயணிகளை விமானத்தில் இருந்து இறங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. பின்னர் அது பிற்பகல் 2:45 மணிக்கு புறப்படுவதற்கு மாற்றியமைக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.