விஜயின் அரசியல் தாக்கம் புதுச்சேரியில் எடுபடுமா? - சபாநாயகர் செல்வம் நச் பதில்!
காரைக்காலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புதுச்சேரி சபாநாயகர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 2026 ல் தேர்தலிலும் தொடரும். முதலமைச்சர் ரங்கசாமி தான் மீண்டும் முதலமைச்சர் வேட்பாளர். அவரது தலைமையில் உள்ள கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்” என்றார்.
தொடர்ந்து அவரிடம் தமிழ்நாட்டில் விஜயின் அரசியல் தாக்கம் புதுச்சேரியில் எடுபடுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “புதுச்சேரியை பொருத்தவரை எந்த நடிகருடைய தாக்கமும் எடுபடாது. புதுச்சேரியைச் சார்ந்த மண்ணின் மைந்தர்களுக்கே இங்கு வாய்ப்பு. எந்த நடிகர் அரசியல் வேலையும் எடுபடாது. விரைவில் புதுச்சேரியில் சட்டசபை கூடும் மக்களுக்கான நிறைய நலதிட்டங்கள் அறிவிப்புகள் வெளியாகும்”
இவ்வாறு புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.