For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? - டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சு!

09:40 PM Nov 11, 2024 IST | Web Editor
உக்ரைன் போர் முடிவுக்கு வருமா    டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சு
Advertisement

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்த உரையாடலின்போது உக்ரைன் போரை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

Advertisement

அண்மையில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் ஜனவரி 6-ம் தேதி அதிபராகப் பொறுப்பேற்றுக் கொள்கிறார். இந்நிலையில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து அவர் உலகத் தலைவர்கள் பலருடன் பேசி வருகிறார். அண்மையில் டொனால்ட் டிரம்ப், “தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பல நாட்டு தலைவர்கள் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு பேசினர். ஆனால், ரஷ்ய அதிபர் புதின் பேசவில்லை. விரைவில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம். அவருடன் பேச தயார்” என கூறியிருந்தார்.

இந்நிலையில், டிரம்ப் தற்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், டிரம்பின் பிரதிநிதிகள் இதை உறுதி செய்யவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் உக்ரைன் - ரஷ்யா போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று டிரம்ப் கூறியிருந்தார். அந்த வகையில் புதினுடனான அவரது பேச்சு கவனம் பெற்றுள்ளது.

https://twitter.com/Simon__Wandera/status/1855988972175896773

ரஷ்யா உக்ரைன் மீது பிப்ரவரி 24, 2022-ல் முதன்முதலில் தாக்குதலைத் தொடங்கியது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என்று பிரகடனப்படுத்தியே ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது. ஆனால் இன்றுவரை உக்ரைன் மீது கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. அமெரிக்காவின் ஆயுத உதவி, நிதியுதவி மூலமாகவே தற்போது ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் போரை நடத்தி வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் உக்ரைனுக்கான ஆயுத உதவி, நிதியுதவியை குறைப்பார் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவின் உதவி கிடைக்காத சூழலில் உக்ரைன் அரசு அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்பும் என்று டிரம்புக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைன் - ரஷ்யா போர் எப்போது முடிவுக்கு வரும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்து வரும் சூழலில் ரஷ்ய அதிபர் புதின் - அமெரிக்க அதிபராகவுள்ள ட்ரம்ப் தொலைபேசி உரையாடல் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Tags :
Advertisement