Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தூர்தர்ஷன் போல் நாங்கள் தமிழ் வாரம் கொண்டாட தமிழ்நாடு அரசு அனுமதிக்குமா?” - சீமான் கேள்வி!

08:00 AM Oct 19, 2024 IST | Web Editor
Advertisement

தூர்தர்ஷன் ஹிந்தி மாத விழா கொண்டாடுவதுபோல் எங்களை தமிழ் வாரம் கொண்டாட தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்குமா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“ஒரு தலைநகரம் தன் அடிப்படை வசதியை, ரூ.2500 கோடி இருந்தால் சீரமைக்க
முடியும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வெள்ள நீரை
போக்க நிதி ஒதுக்கப்படுகிறது. மொத்தத்தில் நகர கட்டமைப்பு சரியில்லை. போதுமான மழை பொழிவு இருந்தாலும் அது கடலில் கலக்கிறது. அதன் பின் கடல்நீரை சுத்திகரிப்பது என்பது தேவையில்லாதது. மழை நீரை சேமிக்க திட்டமிடல் இல்லை. தலைநகரே இப்படி இருந்தால் மற்ற மாநகராட்சிகளின் நிலையை எண்ணிப்பாருங்கள்.

இரு கட்சிகளும் இக்கட்டமைப்பில் தோல்வி அடைந்துள்ளதால், தொடர்ந்து வாக்களித்த மக்கள் தோற்றுக்கொண்டு வருகிறார்கள். கால்வாய்க்கு ஒதுக்கும் நிதி வாய்க்குள் சென்றால் என்ன செய்வது?. ஆளுநரை மாற்ற சொன்ன திமுக, இப்போது பாராட்டுகிறது. தற்போது பாஜக கூட்டணி ஆட்சிதான் நடைபெறுகிறது. மற்ற மாநில முதலமைச்சர்கள், விளையாட்டுத்துறை அமைச்சர்களை பிரதமர் சந்தித்து உள்ளாரா? இதன் மூலமே திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது உறுதியாகிறது. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு வராத பாஜக மத்திய அமைச்சர், கூட்டணியில் இல்லாதபோதும் கலைஞர் நூற்றாண்டு விழா நாணய வெளியீட்டில் பங்கேற்கிறார்.

அப்படி என்றால் புரிந்து கொள்ளுங்கள். அதிமுக பாஜகவுக்கு ஏ டீம் என்றால், திமுக பி டீம் அவ்வளவுதான். இந்தியா என்பது உருவாக்கப்பட்டது. அதில் ஒரே மொழியை வலியிறுத்தினால் தேச ஒற்றுமை கேள்விக்குறியாகும். ஹிந்தி மாதம் விழாவை தூர்தர்ஷன் நடத்துகிறது. தமிழ்நாடு அரசு எங்களை தமிழ் வாரம் விழா நடத்த அனுமதிப்பார்களா? இலங்கையில் எல்லைத் தாண்டி வருபவர்கள் மீனவர் என்பது பிரச்சினை இல்லை. தமிழன் என்பதுதான் பிரச்சினை. சுயமரியாதைக்காக இயக்கம் தொடங்கியவர்கள் எங்கெங்கோ விழுந்து கிடக்கிறார்கள். இறந்து போன சமஸ்கிருதத்தை உயிர்பிக்க ஆர்எஸ்எஸ் துடிக்கும்போது, இறந்து கொண்டிருக்கும்
தமிழை வாழவைக்க தமிழன் ஆளவேண்டும். அவன் தமிழனாய் இருக்கவேண்டும். பாஜக ஹிந்தியை திணிக்கவில்லை. சமஸ்கிருதத்தை திணித்து வருகிறது” என சீமான் தெரிவித்துள்ளார்.

Tags :
DoordarshanhindiNTKSeemanTamilTN Govt
Advertisement
Next Article