Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“GST வரியையும் மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு வசூலிக்குமா?” - சபாநாயகர் அப்பாவு கேள்வி!

மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி வரையறை செய்யும் பட்சத்தில், GST வரியையும் மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு வசூலிக்குமா? என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
09:03 PM Mar 03, 2025 IST | Web Editor
மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி வரையறை செய்யும் பட்சத்தில், GST வரியையும் மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு வசூலிக்குமா? என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள வைகுண்டரின் அவதார
பதியில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு சுவாமி தரிசனம் செய்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு,

Advertisement

“மும்மொழிக் கல்வி மூலம் குலக்கல்வியை கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்கிறது. தமிழ்நாட்டின் கல்விக்கொள்கையை இந்திய அரசு ஏற்றால்
முன்மாதிரியாக திகழும். மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி வரையறை செய்யும் பட்சத்தில், GST வரியையும் மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு வசூலிக்குமா?. என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர்,“தனியார் பள்ளிகளில் இந்தி கற்றுகொடுக்கிறது திமுக, காங்கிரஸ், பாஜக என்பதல்ல பேச்சு. சிபிஎஸ்சி பள்ளிகளில் தமிழ் கட்டாயம் என்ற சட்டத்தை கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?. இஸ்ரோ விஞ்ஞானி ஆராய்ச்சி தலைவர் நாராயணன், சிவன், மயில்சாயி அண்ணாதுரை
உள்ளிட்டோர் தமிழில் அரசு பள்ளியில் பயின்றவர்கள்தான்.

திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பினை
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும், முருகனும், அய்யா வைகுண்டரும் பார்த்துக்கொள்வார்கள்” என்றார்.

Tags :
AppavuBJPCentral GovtGSTpopulationTN Assembly Speaker
Advertisement
Next Article