For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”இந்தி திணிப்பு குறித்த முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்தை ராகுல் காந்தி ஏற்பாரா?” - அஸ்வினி வைஷ்னவ் கேள்வி!

இந்தி திணிப்பு குறித்த முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்தை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஏற்பாரா? என அஸ்வினி வைஷ்னவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
04:04 PM Feb 28, 2025 IST | Web Editor
”இந்தி திணிப்பு குறித்த முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்தை ராகுல் காந்தி  ஏற்பாரா ”   அஸ்வினி வைஷ்னவ் கேள்வி
Advertisement

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை இந்தி திணிப்பு குறித்து தனது எக்ஸ் தளப் பதிவில்,  “இந்தி என்பது ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக, சமஸ்கிருதமும் மேலும் சில மொழிகளும் கலந்து திரிபடைந்ததால் உருவான மொழி. தமிழ், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மொழி. தன்னிலிருந்து திராவிடக் குடும்பத்து மொழிகளைக் கிளைத்திடச் செய்த தாய்மொழி. தமிழ்மொழியை இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது என்று கூறினார்.

Advertisement

மேலும் அவர், இந்தி மொழியின் ஆதிக்கத்தால் புந்தேல்கண்டி, போஜ்புரி, அவ்தி, கண்ணோஜி, கர்வாலி உள்ளிட்ட பல வட மாநில மொழிகள் சிதைத்துவிட்டதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த கருத்தை குறிப்பிட்டு  மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ சமூகத்தில் பிளவை ஏற்படுத்த முன்னெடுக்கப்படும் இதுபோன்ற முயற்ச்சிகளை வைத்து மோசமான ஆட்சி நிர்வாகத்தை மறைக்க முடியாது. முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த கருத்துக்கு  எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என்ன சொல்லப்போகிறார். இந்தி மொழி பேசும் தொகுதியைச் சேர்ந்த ராகுல் காந்தி எம்.பி. இந்த கருத்தை ஏற்றுக்கொள்வாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags :
Advertisement