அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணையுமா? - சென்னையில் அமித்ஷா சொன்னது என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், கூட்டணி விவகாரங்கள் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க பாஜக பல முயற்சிகளை கையில் எடுத்து வருகிறது. குறிப்பாக கூட்டணியில் இருந்து விலகி சென்ற அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர, பாஜக முயற்சித்து வந்தது.
அதன் முக்கிய பகுதியாக இன்று சென்னை வந்த அமித்ஷா இந்த கூட்டணியை உறுதி செய்துள்ளார். இன்று கூட்டாக அண்ணாமலை, இபிஎஸ், அமித்ஷா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா,
“அனைவருக்கும் பங்குனி உத்திர நல்வாழ்த்துக்கள். வரும் தேர்தலில் அதிமுக, பாஜக இணைந்து செயல்படும். தேசிய அளவில் மோடி தலைமையில் இந்த கூட்டணி அமைந்துள்ளது. எடப்பாடி தலைமையிலும் இந்த கூட்டணி அமைந்துள்ளது. 1998ஆம் ஆண்டு முதல் அதிமுக, பாஜக கூட்டணி தொடங்கியது. ஒரு காலத்தில் பாஜக அதிமுக கூட்டணி 31 இடங்களில் வெற்றிப்பெற்றது.
வருகின்ற தேர்தலில் அதிமுக, பாஜக இணைந்து தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். அதிமுக, பாஜக இணைந்துதான் ஆட்சி அமைய உள்ளது தமிழ்நாட்டில். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் கூட்டணி அமையப் போக உள்ளது. வெற்றி பெற்ற பிறகு பாஜக உறுப்பினர்கள் அமைச்சர் ஆவார்கள் என்பது குறித்து கூறுவோம்.அதிமுக எந்த வகையான கெடுபிடியும் பாஜகவிடம் வைக்கவில்லை.” என அமித்ஷா தெரிவித்தார்
இதனைத் தொடர்ந்து அமமுக, ஓபிஎஸ் மற்றும் அதிமுக இணையுமா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்ட கேள்விக்கு, அதிமுகவின் உட்கட்சி பிரச்னையில் நாங்கள் தலையிட போவதில்லை என பதிலளித்தார். கூட்டணியில் யார், யாருக்கு எத்தனை தொகுதி என்பதும் வெற்றி பெற்ற பிறகு ஆலோசனை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.