For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"பஞ்சுமிட்டாய் போல தடை செய்யப்படுமா ஸ்மோக் பிஸ்கட்?" - மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

03:11 PM Apr 24, 2024 IST | Web Editor
 பஞ்சுமிட்டாய் போல தடை செய்யப்படுமா ஸ்மோக் பிஸ்கட்     மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
Advertisement

ஸ்மோக் பிஸ்கட் குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

அண்மையில் கர்நாடகாவில் நைட்ரஜன் ஐஸ் கலந்து உருவாக்கப்பட்ட ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கெட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : “சமூகநீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாட்டிற்கு முக்கிய பங்கு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

திரவ நைட்ரஜனை பிஸ்கெட் உடன் சேர்த்து சாப்பிடும் போது வாய் மற்றும் மூக்கில் இருந்து புகை வரும்.  இதை பொழுதுபோக்கான உணவாக பல்வேறு பொது இடங்களில் மற்றும் சுற்றுலா தளங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  பொருட்காட்சிகளில் நைட்ரஜன் பிஸ்கெட் விற்பனை செய்யப்பட்டுவதை பார்க்க முடிகிறது.  திரவ நிலையில் மைனஸ் 196 செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் திரவ நைட்ரஜன் பிஸ்கெட்டில் சேர்த்து பயன்படுத்துவது ஆபத்து என்கின்றனர் உணவுத்துறை வல்லுநர்கள்.

பொதுவாக உணவுப் பொருள்களை உறைய வைக்கவே திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கு திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டாலும் அது ஆபத்து நிறைந்ததாகவும் உள்ளது.  ஒரே நொடியில் பொருட்களை உறைய வைக்கும் தன்மை கொண்டது.  திரவ நைட்ரஜனை சிறிது திரவ நிலையில் எடுத்துக் கொண்டாலும் வயிற்றில் சென்று  ஆவியாகுதல் நடைபெற்று கடும் உடல் உபாதை ஏற்படுத்துவதோடு உயிரிழப்பு ஆபாயமும் ஏற்படும்.

குறைந்த அளவில் திரவ நைட்ரஜனை குறைவாக பயன்படுத்தும் பொழுது எந்த ஆபத்தும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியான  இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அண்மையில் பஞ்சு மிட்டாயில் உள்ள நிறமி வேதிப்பொருள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என உறுதி செய்யப்பட்ட நிலையில் அதனை அரசு தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ஸ்மோக்கிங் பிஸ்கெட் தயார் செய்யும் இடங்களில் ஆய்வு செய்து,  இதன் பாதிப்பை எடுத்துக் கூறி,  சுற்றறிக்கை கொடுக்கவும்,  முடிவு செய்யப்பட்டிருக்கிறது.  திரவ நைட்ரஜன் பயன்படுத்திய உணவுப்பொருட்களை விற்கக் கூடாது என மாநில அரசின் உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு அளித்துள்ளது.  அதனை மீறி விற்பனை செய்யும் உணவு விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement