“ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்துக்கு பிறகாவது மணிப்பூரை மோடி பார்வையிடுவாரா?” - உத்தவ் தாக்கரே கேள்வி!
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மணிப்பூர் குறித்து பேசியுள்ளார்; இனியாவது பிரதமர் மோடி மணிப்பூரை சென்று பார்வையிடுவாரா? என மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
மணிப்பூர் மக்கள் அமைதிக்காக காத்திருக்கிறார்கள். மணிப்பூர் பிரச்சினையை முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக தீர்க்க வேண்டும். அங்கே வன்முறை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், மோகன் பாகவத்தின் வலியுறுத்தலுக்கு பிறகாவது பிரதமர் மோடி மணிப்பூரை சென்று பார்வையிடுவாரா? என உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை ரத்து செய்ததில் என்ன பயன். தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. ஜம்மு-காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு யார் பொறுப்பேற்பது? ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் கருத்துக்குப் பிறகாவது கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்வாரா? நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். என்டிஏ அரசின் எதிர்காலத்தைப் பற்றி அல்ல” என தெரிவித்துள்ளார்.