For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆட்சியை பிடிக்கிறாரா கீர் ஸ்டார்மர்?.. அதிர்ச்சியில் ரிஷி சுனக்..

07:53 AM Jul 05, 2024 IST | Web Editor
ஆட்சியை பிடிக்கிறாரா கீர் ஸ்டார்மர்    அதிர்ச்சியில் ரிஷி சுனக்
Advertisement

பிரிட்டன் அதிபர் தேர்தலில் கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 410 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் என தேர்தலின் பிந்தைய கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளன. 

Advertisement

பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது. இதனால் நேற்று பிரிட்டனில் ஒரேகட்டமாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியும், தொழிலாளர் கட்சியும் நேருக்கு நேர் மோதின.

நேற்று காலை தொடங்கிய தேர்தல் இரவு 7 மணிக்கு சுமூகமாக முடிந்தது. இந்தியா போலல்லாமல் பிரிட்டனில் வாக்குச்சீட்டு முறையே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மொத்தம் 650 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 326 வெற்றிப் பெற்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க இயலும்.

கருத்துக் கணிப்புகள் படி தொழிலாளர் கட்சி 410 தொகுதிகளில் வெற்றிப் பெரும் எனவும், கன்சர்வேட்டிவ் கட்சி 131 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று அதிகாரத்தை இழக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கருத்து கணிப்பு பலிக்கும் பட்சத்தில் பிரிட்டனில் 14 ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வரும். பிரிட்டனை பொறுத்தவரை கடந்த 2010ம் ஆண்டு முதல் தொடர்ந்து 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியில் உள்ள நிலையில் இந்த முறை அந்த கட்சி அதிகாரத்தை இழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பிரிட்டனின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் கீர் ஸ்டார்மர் பொறுப்பேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சிகளை தவிர பிற கட்சிகளும் இந்த தேர்தலில் குறிப்பிட்ட இடங்களை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி லிபரல் டெமாக்டரட்ஸ் என்ற கட்சி 61 இடங்களிம், ரீஃபார்ம் யுகே என்ற கட்சி 13 இடங்களிலும், ஸ்காட்டிஸ் நேஷனல் கட்சி 10 இடங்களிலும், பிளேட் சைக்கு கட்சி 4 இடங்களிலும், கிரீன் கட்சி 2 இடங்களிலும் வெல்லும் என கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement