For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மீண்டும்... மீண்டுமா..?அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தொடரும் வெடுகுண்டு மிரட்டல்கள்!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் மீண்டும் குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
07:26 AM Apr 18, 2025 IST | Web Editor
மீண்டும்    மீண்டுமா   அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தொடரும் வெடுகுண்டு மிரட்டல்கள்
Advertisement

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலையே சென்னை அண்ணா பல்கலைக்கழக கனிணிமையத்திற்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மிரட்டல் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

Advertisement

இதனைத் தொடர்ந்து கோட்டூர்புரம் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் வைத்து சோதனை செய்ததில் புரளி என தெரிய வந்ததை அடுத்து மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்  தற்போது மீண்டும் இன்று காலையும் வெடிகுண்டு மிரட்டல் குறித்து குறுஞ்செய்தி வந்துள்ளது. காவல்துறையினர் முன்னெச்சரிக்கை காரணமாக நான்சி என்ற மோப்ப நாய்களுடன் மீண்டும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

இதனைத் தொடர்ந்து சென்னை ரயில் நிலையத்திலும் ,விமான நிலையங்களிலும், குறிப்பாக சில பல்கலைக்கழகங்களிலும் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் இமெயில் மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும் வருவதால் காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டது. இந்த விசாரணையில் மூலம் மோப்ப நாய்கள் மூலமாக சோதனை செய்ததில் அவை பெரும்பாலும் புரளி என கண்டறியப்பட்டுள்ளது

இதன் ஒருபகுதியாக சில தினங்களுக்கு முன்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் 100 எனும் காவல்துறை கட்டுப்பாட்டை அறைக்கு அழைப்பு வந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணை செய்ததில் மன நல சீர் வேண்டும் சிறுவன் தனது தந்தையின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியது கண்டறியப்பட்டது.  இதன் பின்னர் போலீசார் எச்சரிக்கை கொடுத்து அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement