Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்குமா? நாளை #SupremeCourt தீர்ப்பு!

03:22 PM Sep 12, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்து, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனு மீது நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

Advertisement

டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது புகார் எழுந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு, திஹாக் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சியை சோ்ந்த மனிஷ் சிசோடியா, பிஆர்எஸ் தலைவா் கவிதா ஆகியோரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதுபான முறைகேடு வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக கூறி, சிபிஐ தரப்பிலும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் திகார் சிறையில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். இதற்கிடையே அமலாக்கத்துறை வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி அமலாக்கத்துறை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இருப்பினும், சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருக்க வேண்டி இருந்தது. இதையடுத்து சிபிஐ வழக்கிலும் தனக்கு ஜாமீன் வழங்குமாறு உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து அவரது ஜானின் மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த மனுமீது நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த வழக்கில் மனிஷ் சிசோடியா, கவிதா ஆகியோருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில், நாளை கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்படுமா? அல்லது திகார் சிறையிலேயே நாட்கள் நீளுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Tags :
Arvind KejriwalBailCBIDelhi Liquor CaseEDSupreme court
Advertisement
Next Article