For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

லாஸ் ஏஞ்சல்சில் மீண்டும் காட்டுத்தீ - 30,000 பேர் வெளியேற்றம் !

லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மீண்டும் காட்டுத்தீ பரவியுள்ளதால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அப்பகுதியை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளன.
03:27 PM Jan 23, 2025 IST | Web Editor
லாஸ் ஏஞ்சல்சில் மீண்டும் காட்டுத்தீ   30 000 பேர் வெளியேற்றம்
Advertisement

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அண்மையில் காட்டுத்தீ பரவியது. இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரிடரால் உயிரிழந்துள்ளனர். இதில் 12,000 கட்டிடங்கள் உள்படப் பல கட்டுமானங்கள் சேதமடைந்த நிலையில் 1.80 லட்சம் பேர் மாற்று இடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

Advertisement

காட்டுத்தீயினால் 163 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தீக்கிரையானது. 200 பில்லியன் அமெரிக்க டாலர்களும் ,இந்திய மதிப்பில் ரூ.17,29,581 கோடிக்கு அதிகமான பொருள்சேதம் ஏற்பட்டது. இந்நிலையில், சற்றே தணிந்த காட்டுத்தீ தற்போது மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வடக்குப் பகுதியில் தீ பரவு வருவதால் 21 சதுர கிலோமீட்டர் அளவில் எரிந்து வருகிறது. இதனால் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை சூழ்ந்துள்ளது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும் அப்பகுதிகளில் இருந்து 30 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை தலைவர் ராபர்ட் ஜென்சன் கூறுகையில், "கடந்த முறை ஈட்டன், பாலிஷேட்ஸ் பகுதியில் காட்டுத்தீயால் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.

அந்த படிப்பினையால் இம்முறை வடக்குப் பகுதியில் தீ பரவியவுடனேயே பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினோம். முந்தைய பாதிப்பை சுட்டிக்காட்டியே மக்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement