For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்! பொதுமக்கள் அதிர்ச்சி!

12:54 PM Nov 16, 2023 IST | Web Editor
நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்  பொதுமக்கள் அதிர்ச்சி
Advertisement

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில்,  ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை
வனத்திற்க்குள் விரட்டும்  பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

Advertisement

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் மலை அடிவார கிராமங்களுக்கு அடிக்கடி யானைகள் வந்து செல்வது வழக்கமாகி இருக்கின்றன.  தீத்திபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த யானைகள்,  உணவுக்காக தக்காளி,  வாழை மற்றும் ரேசன் கடைகளிலிருந்து அரிசி உள்ளிட்டவற்றை உட்கொண்டு விட்டு அதிகாலை சென்று விட்டன.  இந்த நிலையில் இரவு நேரத்தில் யானைகள் மீண்டும் வனத்திலிருந்து வெளியே வந்திருக்கின்றன.

நள்ளிரவு,  அய்யாசாமி மலை அடிவாரத்தில் இருந்து வெளிவந்த யானைகள் அருகாமையில் உள்ள தோட்டங்களுக்குள் உலா வந்து கிராமப் பகுதிகளுக்கும் சென்று இருக்கின்றன. அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தந்த தகவலின் அடிப்படையில் வனத்துறை விரைந்து சென்று மூன்று குழுக்களாக பிரிந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தற்பொழுது அந்த யானைகள் செல்லப்ப கவுண்டன் புதூர் பகுதி வழியாக சென்று வனத்தின் முன்பக்கம்  உள்ள அடர்ந்த புதற்காட்டில் தஞ்சமடைந்திருக்கின்றன.

இந்த யானைகளை விரட்டுவதற்கு வனத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கின்ற
நிலையில்,  மூன்று குழுக்கள் போதாது என்றும் கூடுதலாக வனத்துறை குழுக்களை
அமைத்து யானைகளை விரட்ட வேண்டும் எனவும்  அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வனத்தில் இருந்து யானைகள் அடிக்கடி வெளியே வருவதால் பெரும் அச்சத்தில் பொதுமக்கள் ஆழ்ந்திருக்கின்றனர்.

வனத்தில் இருந்து வெளியே வந்த காட்டு யானைகளை விரட்டும் வனத்துறை,  இனி யானைகள் ஊருக்குள் வராத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags :
Advertisement