For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாலியல் கொடுமைக்கு ஆளானால் விவாகரத்து பெற மனைவிக்கு உரிமை உண்டு - கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

10:00 AM Jan 04, 2024 IST | Web Editor
பாலியல் கொடுமைக்கு ஆளானால் விவாகரத்து பெற மனைவிக்கு உரிமை உண்டு    கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு
Advertisement

இல்லற வாழ்வில் பாலியல் கொடுமைக்கு ஆளானால் விவாகரத்து பெற மனைவிக்கு உரிமையுள்ளது என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் தனது விவாகரத்து கோரி எர்ணாகுளம் மாவட்ட குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் எனது கணவர் ஆபாச படங்களை பார்க்குமாறு கட்டாயப்படுத்துவதாகவும், எனது விருப்பத்துக்கு மாறாக தனது கணவர் செயல்படுவதாலும் விவாகரத்து வழங்க வேண்டும் என கோரியிருந்தார். 

இதையும் படியுங்கள் : “வடசென்னை 2 வரும்... கண்டிப்பா வரும்..!” - நடிகர் தனுஷ் பேச்சு

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் , விவாகரத்து பெறுவதற்கான காரணம் ஏற்புடையது இல்லை என கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தது. அதன் பின், இளம்பெண் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். மேலும், இந்த மனு நீதிபதிகள் அமிர்த் ராவல், சுதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது; "பாலியல் வக்கிரம் குறித்த  நபர்களின் கருத்துகள் மாறுபடும். வயது வந்தோர் தங்கள் சுதந்திரம் மற்றும் சம்மதத்தின் அடிப்படையில் பாலியல் செயல்களில் ஈடுபட்டால், அது அவர்கள் விருப்பம். அதில் நீதிமன்றங்கள் தலையிடாது. மனைவியின் விருப்பத்துக்கும் மாறாக பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினால், அது உடல் மற்றும் மனரீதியான கொடுமையாக அமையும்.

திருமண வாழ்வில் மனைவியின் விருப்பத்துக்கு மாறாக பாலியல் செயல்களில் கணவர் ஈடுபட்டால்,  சம்பந்தப்பட்ட பெண்கள் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்ய உரிமை  உண்டு. மனுதாரரின் கணவர் தனது இச்சைக்கு இணங்க மறுத்த மனைவியை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தியது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், இதன்  உண்மை தன்மையை ஏற்றுக்கொண்டு விவாகரத்து வழங்கபடும்" என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 

Tags :
Advertisement