WI vs IND | மகளிர் ஒருநாள் கிரிக்கெட்... இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!
- இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலாவதாக டி20 போட்டி நடைபெற்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இதையும் படியுங்கள் : #Chennai-ல் இன்று நடைபெறுகிறது திமுக செயற்குழு கூட்டம்!
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று (டிச.22) தொடங்குகிறது. முதல் டி20 போட்டி வதோதராவில் இன்று நடைபெறுகிறது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. டி20 தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் களம் இறங்கும்.
அதேசமயம் வெற்றிப்பயணத்தை தொடரும் கணக்கில் இந்திய அணி போராடும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெல்லப்போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.