For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”மேய்ச்சலுக்கு ஏன் மாற்று இடம் அறிவிக்கவில்லை” - சீமான் கேள்வி!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே குரங்கணி பகுதியில் வனத்துறையின் தடையை மீறி மலை மீது நாட்டு இன மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று போராட்டம் நடத்தினார்.
04:51 PM Aug 03, 2025 IST | Web Editor
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே குரங்கணி பகுதியில் வனத்துறையின் தடையை மீறி மலை மீது நாட்டு இன மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று போராட்டம் நடத்தினார்.
”மேய்ச்சலுக்கு ஏன் மாற்று இடம் அறிவிக்கவில்லை”   சீமான் கேள்வி
Advertisement

வனப்பகுதிக்குள் மாடுகளை மேய்ச்சலுக்கு செல்ல வனத்துறையினர் தடை செய்யப்பட்டுள்ளதைக் இதனை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நாட்டு இன மாடுகளை மேச்சலுக்கு அழைத்துச் செல்லும் போராட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே குரங்கணி செல்லும் சாலையில் சுமார் 1000
நாட்டு இன மாடுகளை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக அழைத்து  சென்றார் சீமான்.

Advertisement

அப்போது சீமானை வனத்துறை அலுவலர் நாகராஜன் அன்பரசன் உள்ளிட்ட வனத்துறையினர் தடுத்து மலை மேல் மாடுகளை ஏற்றி செல்ல மறுத்தனர். இதனால் சீமான் மற்றும் வனத்துறையினர் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து தடையை மீறி சீமான் விவசாயிகளுடன் 1000 நாட்டு இன மாடுகளை மலை மேல் ஏற்றி மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான்,

”எங்கள் கோரிக்கைகளை ஏற்காமல் மலைமேல் மேய்ச்சலுக்கு கால் நடைகளை தடை செய்தால் மீண்டும் மாடுகளை மலை மேல் ஏற்றி போராட்டம் நடத்துவோம். மாடுகளை மலை மேல் ஏற்றி செல் தடை என அறிவித்துள்ளீர்கள் அதற்கு மாற்று இடம் ஏன் அறிவிக்கவில்லை..?. எத்தனை ஆண்டுகளாக மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கிறோம் திடீரென்று வனவிலங்குகள் மீது உங்களுக்கு அக்கறை வந்தால் நாங்கள் எங்கள் மாடுகளை எங்கே சென்று மேய்ப்பது...? வெடிகளை வைத்து மலைகளை தகர்க்கும் போது பாதுகாப்பாக இருக்கும் வனவிலங்குகள், எங்கள் மாடுகள் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றால் பாதுகாப்பு இல்லையா? கால்நடைத்துறை ஒன்று இருக்கிறது அதற்கு அமைச்சர் என்றும் இவர் இருக்கிறார்.ஆனால் மாடுகளை பாதுகாக்க முடிவதில்லை”

என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement