For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் ஷர்மா நீக்கப்பட்டது ஏன்..? - அஜித் அகர்கர் விளக்கம்..!

இந்திய அணியின் ஒருநாள் போட்டிகான கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் ஷர்மா நீக்கப்பட்டது குறித்து தேர்வு குழுத்தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார்.
08:17 PM Oct 04, 2025 IST | Web Editor
இந்திய அணியின் ஒருநாள் போட்டிகான கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் ஷர்மா நீக்கப்பட்டது குறித்து தேர்வு குழுத்தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார்.
ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் ஷர்மா நீக்கப்பட்டது ஏன்      அஜித் அகர்கர் விளக்கம்
Advertisement

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. போட்டி அட்டவணைப்படி, இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகள் வருகிற 19-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடக்கிறது. இதனை தொடர்ந்து டி20 போட்டிகள் அக்டோபர் 29-ந்தேதி முதல் நவம்பர் 6-ந்தேதி வரை நடக்கிறது.

Advertisement

இந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருநாள் அணிக்கான கேப்டனாக இருந்த ரோகித் ஷர்மா நீக்கப்பட்டு  சுப்மன் கிலுக்கு கேப்டன் பொறுப்பி அளிக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்டுள்ளார்.  டி20 மற்றும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட ரோகித் சர்மா ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரோகித் ஷர்மாவிற்கு பதிலாக  ஒருநாள் இந்திய அணியின் கேப்டனாக  சுப்மன் கில்லை நியமித்ததுக்கான காரணத்தை இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் விளக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியது,

”டி20 உலகக் கோப்பையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 3 FORMAT-களுக்கு வெவ்வேறு கேப்டன்களை வைத்திருப்பதும் நடைமுறைக்கு சாத்தியமற்றது. ஒருநாள் போட்டிகள் குறைவாகவே விளையாடுகிறோம். இப்போதே கில்லை கேப்டனாக நியமித்தால்தான் 2027 உலகக் கோப்பைக்கு தயாராக முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement