For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு ஏன்? இளைஞர் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்!

10:33 AM Jul 15, 2024 IST | Web Editor
ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு ஏன்  இளைஞர் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்
Advertisement

ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில்  தாக்குதல் நடத்திய இளைஞனைப் பற்றி அவரது குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மீண்டும் அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியிருக்கும் சூழலில், அவரை எதிர்த்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதால், மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இருவரும் தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் ஒருபகுதியாக அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் டொனால்ட் ட்ரம்பின் வலது காது பகுதியில் காயம் ஏற்பட்டது.

பின்னர், பாதுகாவலர்கள் அவரை மேடையிலிருந்து பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்றனர். காயமடைந்த டொனால்ட் ட்ரம்ப் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மீது சிறப்பு பாதுகாப்புப் படை நடத்திய பதில் தாக்குதலில் அந்த நபர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து எஃப்.பி.ஐ நடத்திய விசாரணையில் துப்பாக்கி சூடு நடத்தியவரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. 20 வயதான தாமஸ் மேத்யூ குரூக்ஸ் என்ற இளைஞர் டொனால்டு டிரம்பை துப்பாக்கியால் சுட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டதற்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரசார கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகே உள்ள கட்டடத்தின் மேற்கூரையில் நின்று டொனால்டு டிரம்பை அந்த இளைஞர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்த நிலையில் துப்பாக்கியால் சுட்ட இளைஞரின் குடும்பத்தினர் இதுகுறித்து அறிந்ததும் அதிர்ச்சியில் உறைந்தனர். துப்பாக்கிச்சூடு குறித்து அவரது பெற்றோர் சிஎன்என் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் “ என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அரசின் விசாரணைக்கு பின்னரே எதுவும் சொல்ல முடியும்” என தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூடு நடத்திய தாமஸின் பெற்றோர்களான மேத்யூ மற்றும் மேரி க்ரூக்ஸ் ஆகிய இருவரும் நடத்தை ஆலோசகர்கள் ( Behavioral Counsellors) ஆக உள்ளனர். தாமஸ் க்ரூக்ஸுக்கு 20 வயது ஆகிய நிலையில் அவர் வாக்களிக்கத் தகுதி பெற்ற முதல் அதிபர் தேர்தலாக இதுவாகும்.

Tags :
Advertisement