For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பேரிடர் இல்லை எனக் கூறிய நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் ஆய்வு செய்வது ஏன்? -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

01:34 PM Dec 25, 2023 IST | Web Editor
பேரிடர் இல்லை எனக் கூறிய நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் ஆய்வு செய்வது ஏன்   அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Advertisement

தேசிய பேரிடர் இல்லை எனக் கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தூத்துக்குடியில் ஆய்வு செய்ய உள்ளார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  

Advertisement

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.   தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்தன.

இந்த நிலையில்,  நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினர், ஆடு மாடு போன்ற கால்நடைகள் மற்றும் வீடுகளை இழந்தோருக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,முதற்கட்டமாக 11 உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கியுள்ளோம். கால்நடைகள், விளைநிலங்கள் ஆகியவற்றை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் முதற்கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்படும். பத்து நாட்களாக அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் களத்தில் பணி செய்கிறார்கள், தற்போது இதில் அரசியல் வேண்டாம்.

குளங்களை தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழிசை சௌந்தர்ராஜன் அரசியல் காரணமாக பேசுகிறார். வரலாறு காணாத நூறு ஆண்டுகளில் இல்லாத அளவு கன மழை பெய்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என்ன பணிகள் நடக்கிறது என்பது மக்களுக்கு தெரியும். மக்கள் இந்த பிரச்சனையை புரிந்து கொள்வார்கள்.

மலை கிராமமான மாஞ்சோலைக்கு பேருந்து போக்குவரத்து துவங்காத நிலையில், மக்கள் இலவசமாக வேன் உள்ளிட்ட வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள. பேரிடர் இல்லை என கூறிய நிதி அமைச்சர் பேரிடர் பாதிப்புகளை பார்வையிட நாளை (டிச. 26) தூத்துக்குடி வருகிறார். முறையாக பார்வையிட்டு தகுந்த ஆய்வு செய்து நிதி வழங்குவார் என நம்புகிறோம்.

பிரதமர் மோடிதமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போதைய நிலைமை குறித்து பேசி உள்ளார். முதலமைச்சரும் நிலைமையை எடுத்துக்கூறி கூடுதல் நிதி கோரி உள்ளார். பிரதமரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து நாளை தூத்துக்குடி வரக்கூடிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தகுந்த நிதி தருவார் என நினைக்கிறோம்" என்றார்.

Advertisement