மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்பில் இந்திய பங்குச்சந்தை தப்பியது எப்படி?
உலகளவில் ஒப்பிடுகையில், மைக்ரோசாப்ட் செயலிழப்பால் இந்திய பங்குச் சந்தைகள், வங்கி சேவைகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இதற்கு காரணம் என்ன தெரியுமா?
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் உலகம் முழுவதும் நேற்று முடங்கியதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. CrowdStrike சாப்ட்வேரின் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல் தான் கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த விண்டோஸ் செயலிழப்பால் உலகம் முழுவதும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் உலகளவில் வர்த்தகமும் பாதித்தது. ஐடி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
உலகளவில் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெரும்பான்மையாக வங்கி, பங்குச்சந்தையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. நாட்டில் உள்ள ஒரு 10 வங்கிகளுக்கே சிறிய இடையூறுகள் ஏற்பட்டன. அவையும் தீர்க்கப்பட்டன என ரிசர்வ் வங்கியும் தெரிவித்தது.
மைக்ரோசாப்ட் செயலிழப்பால் இந்தியப் பங்குச்சந்தையில் பாதிப்பு ஏற்படாததற்கு காரணம் என்ன?
அமெரிக்கா மற்றும் லண்டன் பங்குச்சந்தை குழுக்களுடன் ஒப்பிடுகையில் இந்தியப் பங்குச் சந்தை ஐடி நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச தொகையையே செலவிடுகிறது. இதன் காரணமாகவே உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் பங்குச்சந்தையில் அவ்வளவாக சரிவு ஏற்படவில்லை. லண்டன் பங்குச் சந்தை ஐடி நிறுவனங்களுக்கு ரூ. 6,556 கோடி செலவிடுகிறது. அமெரிக்கா ரூ.1,949 கோடியை செலவிடுகிறது. ஆனால் இந்தியா வெறும் ரூ.570 கோடியை IT செலவினங்களுக்காகச் செலவிடுகிறது.
செபி என்றால் என்ன?
இந்தியாவின் பங்குச்சந்தை மற்றும் பரிவர்த்தனை வாரியமே (Securities and Exchange Board of India) செபி என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பாகும்.