ஐஸ்கிரீமில் இருந்த விரல் யாருடையது ? டிஎன்ஏ அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
ஐஸ்கிரீம் கோனில் விரல் சிக்கிய விவகாரத்தில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை மருத்துவர் ஒருவர் ஐஸ்கிரீம் கோனில் மனித விரலைக் கண்டுபிடித்தார். இதனை மருத்துவர் வீடியோ எடுத்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இதையடுத்து, ஐஸ்கிரீம் பேக் செய்யப்பட்ட அதே நாளில் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் காயமடைந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஐஸ்கிரீமில் இருந்த விரலும், ஊழியரின் டிஎன்ஏவும் பொருத்தப்பட்டன. டிஎன்ஏ பரிசோதனையில் ஐஸ்கிரீமில் கண்டெடுக்கப்பட்ட விரலின் பகுதி ஊழியரின்து என்பது தெரியவந்தது.
உரிமம் ரத்து:
யம்மோ நிறுவனத்திற்கு ஐஸ்கிரீம் சப்ளை செய்யும் உற்பத்தியாளரின் உரிமத்தை FSSAI ரத்து செய்துள்ளது. உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை அதிகாரி கூறுகையில், "எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,யின் மேற்கு மண்டல அலுவலக குழு, ஐஸ்கிரீம் உற்பத்தியாளரின் வளாகத்தை ஆய்வு செய்து, அதன் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு நிறுவனம் முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்துள்ளது. சீல் வைக்கப்பட்டுள்ளது. போலீஸில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நிறுவனம் மீது உணவுப் பொருட்களில் கலப்படம் செய்தல் மற்றும் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.