Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

களம் யாருக்கு...தனித்தொகுதியான திருவள்ளூர் தொகுதி? கட்சிகளில் யாருக்கு கிடைக்கும்?

01:13 PM Mar 07, 2024 IST | Web Editor
Advertisement

தனித் தொகுதியான திருவள்ளூர் தொகுதியை பொறுத்தவரை எந்தெந்த கட்சி சார்பில் யார் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்புள்ளது என்பதை நியூஸ் 7 தமிழின் களம் யாருக்கு பகுதியில் பார்க்கலாம்.... 

Advertisement

திமுக கூட்டணியில் கடந்த தேர்தலின்போது தனித்தொகுதியான திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.  அப்போது அக்கட்சி சார்பில் போட்டியிட்ட டாக்டர் ஜெயக்குமார்,  வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார்.  இம்முறையும் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுமாயின் மீண்டும் ஜெயக்குமாரே வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவரை தவிர முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் லயன் ரமேஷ் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் ஆகியோரும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்றொருபுறம் திருவள்ளூர் தனித் தொகுதியில் திமுக நேரடியாக களமிறங்க வேண்டும் என,  திமுக மாவட்ட நிர்வாகிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. கோரிக்கைகள் ஏற்கப்பட்டு திமுக இந்த தொகுதியில் போட்டியிட்டால் வேட்பாளர்களாக மாவட்ட துணைச் செயலாளர் காயத்ரி ஸ்ரீதரன்,  மத்திய மாவட்ட பொருளாளர் நரேஷ், கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் கதிரவன் மற்றும் மாநில அயலக அணி துணைச் செயலாளர் கன்னிகை ஜி.ஸ்டாலின் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனித் தொகுதி என்பதால் கூட்டணியில் உள்ள விசிக-விற்கு திருவள்ளூர் தொகுதி ஒதுக்கப்பட்டால் அக்கட்சியும் இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல அதிமுக சார்பில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட,  மருத்துவர் அணி மாநில செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் வேணுகோபாலுக்கு அதிகம் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.  அதேபோல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலராமன்,  பொன்.ராஜா மற்றும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராகேஷ் ஆகியோரும் வேட்பாளர் சீட் கேட்டு கட்சி தலைமையை அணுகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக சார்பில் திருவள்ளூர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்க கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.  அந்த வகையில் கிழக்கு மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார், பட்டியல் அணி மாநில துணைத் தலைவர் அன்பாலயா எஸ்.சிவகுமார், பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி, மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி ஆகியோர் போட்டியிட விருப்பம் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  மற்றொருபுறம் பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம் அணியோ அல்லது டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக-வோ இணையும் பட்சத்தில், அவர்களுக்கு திருவள்ளூர் தனித் தொகுதியை ஒதுக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த முழு செய்தியையும் காணொளியாக காண: 

Tags :
Election2024
Advertisement
Next Article