Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பூக்கள் என்றால் யாருக்கு ஒவ்வாமை?" - வைரலாகும் சமந்தாவின் பதிவு!

03:42 PM Jan 19, 2024 IST | Web Editor
Advertisement

பூக்கள் என்றால் யாருக்கு ஒவ்வாமை என்ற சமந்தாவின் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.

Advertisement

தமிழ்,  தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா.  இவர் மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  சிகிச்சையின் பலனாக அவருக்கு உடல்நலம் தேறி வந்த நிலையில்,  மீண்டும் மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் அண்மையில் வெளியாகின.

இதனை தொடர்ந்து,  மயோசிடிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மயோசிடிஸ் இந்தியா என்ற தொண்டு நிறுவனத்தின் விளம்பர தூதராக சமந்தா நியமிக்கப்பட்டார். இதன் மூலம்,  மயோசிடிஸ் நோய் குறித்து நாடு முழுவதும் பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி,  நோயின் தீவிர தன்மையை குறைக்க முடியும் என்று மயோசிடிஸ் இந்தியா தெரிவித்திருந்தது. தொடர் சிகிச்சையின் காரணமாக அவர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:  பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய குற்றவாளிகளுக்கு கூடுதல் அவகாசம் இல்லை – உச்ச நீதிமன்றம் அதிரடி!

இந்த நிலையில்,  நடிகை சமந்தா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  "சில அழகான விஷயங்களை பார்த்தால் நம் மனத்துக்குள் கலவையான எண்ணங்கள் தோன்றும். அதற்காக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவது என்பது மிகவும் வருத்தமானது. பூக்கள் என்றால் யாருக்கு ஒவ்வாமை?" எனப் பதிவிட்டுள்ளார்.  அதில் பூக்களுக்கு அருகே சிரித்த முகத்துடன் அவர் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Tags :
Insta PostinstagramMayositisnews7 tamilNews7 Tamil UpdatessamanthaSamantha RuthprabhuViral
Advertisement
Next Article