அரியணையில் அமரப்போவது யார்? டெல்லி, ஈரோடு கிழக்கில் இன்று வாக்கு எண்ணிக்கை!
டெல்லி சட்டப்பேரவையில் உள்ள 70 தொகுதிகளுக்கான தேர்தல், கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்றது. இங்கு 66.25 சதவிகித வாக்குகள் பதிவாகியதாக, இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு, 36 தொகுதிகளில் வெற்றி தேவைப்படும். தேர்தல் களத்தில் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இத்தேர்தலில் ஆட்சியில் இருக்கும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையேயான மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களத்தில் 603 ஆண்கள் உட்பட 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் களத்தில் 603 ஆண்கள் உட்பட 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அதன்படி, இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கையில் பிற்பகலுக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நான்காவது முறையும் ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றுமா அல்லது 26 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியைப் பிடிக்குமா என நாளை தெரிந்துவிடும். அதேபோல், கடந்த 5ம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகிறது. இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் 'சீல்' உடைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை 17 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படும். காலை 11 மணி அளவில் முன்னணி நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் துணை ராணுவத்தினரும், உள்ளூர் போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.