Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஃபைனலில் பெங்களூருவுடன் மோதப்போவது யார்? குவாலிஃபையர் 2 போட்டியில்பஞ்சாப் - மும்பை அணிகள் இன்று மோதல்!

குவாலிஃபையர் 2 போட்டியில் இன்று பஞ்சாப் - மும்பை அணிகள் மோதுகின்றன.
08:41 AM Jun 01, 2025 IST | Web Editor
குவாலிஃபையர் 2 போட்டியில் இன்று பஞ்சாப் - மும்பை அணிகள் மோதுகின்றன.
Advertisement

10 அணிகள் இடையிலான 18-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்த தொடரில், புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த பஞ்சாப் – பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முதல் குவாலிஃபையர் போட்டி கடந்த மே.29ம் தேதி நடைபெற்றது. இதில், பஞ்சாப்பை வீழ்த்தி முதல் அணியாக பெங்களூரு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தோல்வி கண்ட பஞ்சாப் கிங்ஸ் 2வது தகுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

Advertisement

இதையும் படியுங்கள் : Miss World 2025 | உலக அழகி பட்டத்தை வென்றார் தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசாட்டா… பரிசுத் தொகை இத்தனை கோடியா?

தொடர்ந்து, எலிமினேட்டர் போட்டியில் குஜராத் – மும்பை அணிகள் நேற்று முன்தினம் (மே 30) மோதின. இதில் குஜராத்தை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்று 2வது தகுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது? என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதி சுற்று ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஜுன் 1) நடைபெறுகிறது.

இதில் முதல் குவாலிஃபையர் சுற்றில் (தகுதி சுற்று) தோல்வி கண்ட பஞ்சாப், வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற மும்பை அணியுடன் மோதுகிறது. இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெறுவதற்கு இரு அணிகளும் தீவிரம் காட்டும். இதனால் இன்றைய போட்டியில் பரபரபுக்கு பஞ்சம் இருக்காது. இறுதிப்போட்டியில் பெங்களூருவுடன் எந்த அணி மோத உள்ளது? என்பதை அறிந்துக்கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து, ஐபிஎல் 2025 தொடரின் இறுதிப்போட்டி ஜுன் 3ம் தேதி நடைபெற உள்ளது.

Tags :
CricketIPLIPL 2025MI vs PBKSMumbainews7 tamilNews7 Tamil UpdatesPBKS vs MIPunjabSportsSports Update
Advertisement
Next Article