இறுதி போட்டிக்குள் நுழையப் போவது யார்? குவாலிஃபயர் 1 சுற்றில் சன் ரைசர்ஸ் - கேகேஆர் இன்று மோதல்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கான முதலாவது பிளே - ஆப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன.
மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17வது சீசன், அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் மே - 19-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இன்று (மே 21-ம் தேதி )முதல் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்து, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் 5 முதல் 10 இடங்களை பெற்று லீக் சுற்றுடன் ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறின.
மேலும், லீக் சுற்று முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 வெற்றிகள் பெற்று 20 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து வலுவான அணியாக இருக்கிறது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 வெற்றிகளுடன் 17 புள்ளிகள் பெற்று 2-ஆவது இடத்தில் உள்ளது.
இதையும் படியுங்கள் : தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரி முதலமாண்டு மாணவர் சேர்க்கை - மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!
இந்நிலையில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது பிளே- ஆஃப் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 2-வது இடம் பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்த போட்டியில் தோல்வி அடையும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.