Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பந்துவீச்சுப் பயிற்சியாளர் யார்?

05:49 PM Jul 10, 2024 IST | Web Editor
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கெளதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த பந்துவீச்சுப் பயிற்சியாளர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

டி20 உலகக் கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, அவர் தொடர்ந்து பயிற்சியாளராக செயல்பட விருப்பம் தெரிவிக்காததால், கெளதம் கம்பீரை பிசிசிஐ தேர்வு செய்து நேற்று (ஜூலை 9) அறிவித்தது. இந்நிலையில், தற்போதைய பந்துவீச்சுப் பயிற்சியாளராக உள்ள பாராஸ் மாம்ப்ரேவுக்கு பதிலாக புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளரை நியமிக்கும் வேலையை பிசிசிஐ தொடங்கியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர்கள் ஜாகீர் கான் மற்றும் லட்சுமிபதி பாலாஜி ஆகியோரின் பெயரை பிசிசிஐ பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய தலைமைப் பயிற்சியாளர் கம்பீருடனான் இறுதி ஆலோசனைக்கு பிறகு பந்துவீச்சுப் பயிற்சியாளர் மற்றும் இதர உதவி பயிற்சியாளர்களின் பெயர்களை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணிக்காக 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜாகீர் கான் 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 200 ஒருநாள் போட்டிகளில் 282 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதேபோல், பாலாஜி இந்திய அணிக்காக 8 டெஸ்ட் போட்டிகளில் 27 விக்கெட்டுகளும், 30 ஒருநாள் போட்டிகளில் 37 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

Tags :
#Goutham GambhirBalajiBCCIBowling CoachNews7Tamilnews7TamilUpdatesTeam IndiaZahir khan
Advertisement
Next Article