For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கச்சத்தீவை தாரை வார்த்தது யார்? தேர்தல் நேரத்தில் நாடகம் நடத்துவது யார்? என மக்களுக்கு தெரியும்” - ஆர்.பி. உதயகுமார்!

“கச்சத்தீவை தாரை வார்த்தது யார், தேர்தல் காலம் என்பதால் அதை மீட்டெடுப்பது என்ற பெயரில் நாடகம் நடத்துவது யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்” என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
03:58 PM Apr 03, 2025 IST | Web Editor
“கச்சத்தீவை தாரை வார்த்தது யார்  தேர்தல் நேரத்தில் நாடகம் நடத்துவது யார்  என மக்களுக்கு தெரியும்”   ஆர் பி  உதயகுமார்
Advertisement

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடிய 16 பேரை சுட்டுக் கொன்றதன் 105வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களின் நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Advertisement

முன்னதாக பி.கே.மூக்கையாத்தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆர்.பி.உதயக்குமார் தலைமையிலான நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயக்குமார்.,

“வி.பி.சிங் முதலமைச்சராக இருந்த போது மத்திய அமைச்சரவையில் இருந்தது திமுக. தேவகவுடா பிரதமராக இருந்த போது மத்திய அமைச்சரவையில் இருந்தது திமுக. மன்மோகன்சிங் அமைச்சரவையில், வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தது திமுக. ஏறத்தாழ 17 ஆண்டுகள் 6 முதல் 7 பிரதமர்கள் ஆட்சியில் இருந்த போது அமைச்சரவையில் பங்கேற்ற திமுக, கச்சத்தீவு மீட்பு குறித்து வாய் திறக்காமல், ஒப்பந்தம் போடும்போது மௌனம் காத்து உரிமையை விட்டு கொடுத்தது.

இது இந்திய தேசத்தின் ஒரு அங்கம். கச்சத்தீவை தாரை வார்த்ததை எதிர்த்து
நீதிமன்றம் சென்றால் தான் நியாயம் கிடைக்கும் என்ற அடிப்படையில், அதிமுக
பொதுச்செயலாளராக இருந்த போது கச்சத்தீவை மீட்க 2008 ல் வழக்கு தொடுத்து,  2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி மலர்ந்த பின் வருவாய்த்துறையையும் வாதியாக
சேர்த்தார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

ஏனென்றால் காவேரியில் சட்ட போராட்டம் நடத்தி தான் உரிமையை ஜெயலலிதா அரசு பெற்று தந்தது. முல்லை பெரியாறை 152 அடி உயர்த்தலாம் என்று சட்ட போராட்டம் நடத்திதான் பெற்று கொடுத்தது. டெல்டா மாவட்டத்தில் மீத்தேன், ஈத்தேன் - க்கு தனிச்சட்டம் இயற்றி டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. அதேபோல மத்தியில் உள்ள அரசு பாராமுகமாக இருப்பதால் நீதிமன்றத்திற்கு சென்று உரிய பலனை பெற முடியும் என்ற அடிப்படையில் தான் சென்றார்கள்.

இந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கு குறித்து எந்த முன்னெடுப்பும் எடுக்காமல் அவர்களின் அபிடவிட்-யை கூட ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போது எடுத்து சொல்லியுள்ளார். மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதை தான் நாங்களும் சொல்கிறோம் என்று அன்றைய முதலமைச்சர் சொல்லியிருக்கிறார் இதெல்லாம் வரலாறு யாரும் மறைக்க முடியாது.

தாரை வார்த்தது யார், தேர்தல் காலம் என்பதால் அதை மீட்டெடுப்பது என்ற பெயரில் நாடகம் நடத்துவது யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்”  எனப் பேசினார்.

Tags :
Advertisement