இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது யார்? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆறு நாட்கள் அரசுமுறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனிடையே நெதர்லாந்தில் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
2 நாடுகள் இடையே சண்டை நாடாகும் போது மற்ற உலக நாடுகள் பிரச்சினையை தீர்க்க முயற்சிப்பது இயல்பு. ஆனால் இந்திய - பாகிஸ்தான் இடையே நேரடியாகவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சண்டை நிறுத்தம் கொண்டு வரப்பட்டது.
அமெரிக்காவுக்கு மட்டுமின்றி எங்களுடன் பேசிய அணைத்து நாடுகளுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். சண்டை நிறுத்தவேண்டும் என்றல் பாகிஸ்தான் நேரடியாக எங்களிடம் சொல்ல வேண்டும், அதனை அவர்களிடம் இருந்து நாங்கள் நேரடியாக கேட்கவேண்டும். அதன்பிறகு தன அந்நாட்டு ராணுவ தளபதி நமது நாட்டு தளபதியை தொடர்பு கொண்டு சண்டை நிறுத்துமாறு கூறியுள்ளார். அதன் பிறகுதான் சண்டை முடிவுக்கு வந்தது என்று விளக்கம் அளித்துள்ளார்.