For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை வெள்ளப் பெருக்கின் போது ஆவின் பால் தட்டுபாடு ஏற்பட்டது என்று யார் சொன்னது? மக்கள் சொன்னார்களா? - அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி!

06:56 PM Dec 10, 2023 IST | Web Editor
சென்னை வெள்ளப் பெருக்கின் போது ஆவின் பால் தட்டுபாடு ஏற்பட்டது என்று யார் சொன்னது  மக்கள் சொன்னார்களா    அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி
Advertisement

சென்னை வெள்ளப் பெருக்கின் போது ஆவின் பால் தட்டுபாடு ஏற்பட்டது என்று யார் சொன்னது? மக்கள் சொன்னார்களா? என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

அப்போது, பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:

சென்னை வெள்ளப் பெருக்கின் போது ஆவின் பால் தட்டுபாடு ஏற்பட்டது என்று யார்
சொன்னது? மக்கள் சொன்னார்களா? அல்லது அரசியல் உள் நோக்கத்துடன் சொல்லுகிறார்களா? முதல் நாளில் பால் கொண்டு சேர்க்க முடியாமல் 50 சதவீதம் பால் தேக்கம் ஏற்பட்டது.  அதிலும் மாநகராட்சியுடன் இணைந்து உடனே விநியோகம் செய்ய தொடங்கினோம்.

இரண்டாவது நாள் ஆவின் நிர்வாகமே முழு விநியோகம் செய்தது. மூன்றாவது நாள் தனியார் விநியோகஸ்தர் மூலமும் விற்பனை மேற்கொண்டோம். எல்லோருக்கும் விநியோகம் செய்தோம். தற்போது 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பார்லர் வைத்துள்ளோம். யாரும் அலறியடித்து வாங்க வில்லை, பால் தட்டுப்பாடு என்பது மிகை படுத்தப்பட்ட பேச்சு.

ஆவின் பால் சம்பந்தமாக தொடர்ந்து விமர்சனம் எழுவது நல்லது தான்.
ஏனென்றால் ஜனநாயகத்தின் அடிப்படையே இது தான். அதிலும் மகிழ்ச்சி என்னவென்றால் சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் யாருக்கும் சொல்ல முடியவில்லை. அதில் நான் ரெம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். சென்னையில் 4000 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டை முன் வைப்பது மக்கள் அல்ல. இதில் முதல் கட்ட பணி தான் முடிந்துள்ளது. இனியும் பணிகள் படி படியாக நடைபெறும். இதை கொச்சை படுத்தி பேசுகின்றனர். நாங்கள் எதிர் கட்சியாக இருந்த நேரத்தில் களத்தில் நின்று பணியாற்றினோம். ஆனால் இன்று குறை சொல்லுவவர்கள் யாரும் களத்தில் இல்லை.

சரத்குமாருக்கு பாஜகவுடன் இணையும் நோக்கம் இருப்பதால் தான் இந்த கருத்தை கூறி உள்ளார். சரத்குமார் கூறுவது போன்று உலக அளவில் தலைவர்கள் போற்றும் தலைவராக மோடி இருக்க வேண்டும் என்பது இந்திய குடி மகனாகிய எனக்கும் விருப்பம் தான். ஆனால் அவர் அப்படி இல்லையே என்பது தான் எனக்கு வருத்தம். ஆசியாவின் ஜோதி என்று உலக நாட்டு மக்களால் போற்றப்பட்ட நேரு அவர்கள் உலக
சமாதானத்தை பற்றி பேசினார். இவர்கள் உள்ளுர் சமாதானத்தை பற்றி கூட பேச வில்லை.

மதத்தை மையப்படுத்தி வாக்கு வங்கியை ஒருங்கிணைக்கும் ஒருவர் எப்படி ஆசிய ஜோதி போன்று பெயர் வாங்க முடியும், கஷ்டம். கொள்கை இல்லாத கட்சிகள்  தான் பாஜகவுடன் கூட்டணி வைக்கும். கொள்கை உள்ள கட்சி பாஜகவுடன் கூட்டணி வைக்காது. இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

சரத்குமாருக்கு பாஜகவுடன் இணையும் நோக்கம் இருப்பதால் தான் இந்த கருத்தை கூறி உள்ளார். கொள்கை இல்லாத கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி வைக்கும்,
கொள்கை உள்ள கட்சி கூட்டணி வைக்காது. தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டத்தில் நியூஸ் 7 தமிழுக்கு பிரேத்தேக பேட்டி.

Tags :
Advertisement