Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நெல்லை மாநகராட்சியின் புதிய மேயர் யார்? - அமைச்சர்கள் இன்று ஆலோசனை!

09:23 AM Aug 04, 2024 IST | Web Editor
Advertisement

நெல்லையில் புதிய மேயரை தேர்ந்தெடுப்பது குறித்து அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் தங்கம் தென்னரசு இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது.

Advertisement

நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய முடிவெடுத்து பதவி விலகல் கடிதம் ஜூலை 8-ம் தேதியன்று மாநகராட்சி ஆணையாளர் தாக்ரே சுபம் ஞானதேவிடம் வழங்கினார். பின்னர் கடிதம் ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மேயர் பதவி காலியானதாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவிக்கப்படும் தேதியில் மேயர் தேர்தல் நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து புதிய மேயரை தேர்ந்து எடுப்பதற்கான மறைமுக தேர்தல் நாளை (ஆக. 5) நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா அறிவித்துள்ளார்.

நாளை மறைமுக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று (ஆக. 4) ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர். அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெறும் இக்கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதில் நெல்லை மாநகராட்சிக்கு மேயர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு, கட்சி தலைமை மூலம் அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

Tags :
DMKKN NehruMayorNellaiNews7Tamilnews7TamilUpdatesThangam ThenarasuTirunelveli
Advertisement
Next Article