For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Apple நிறுவனத்தின் புதிய CFO - இந்திய வம்சாளியான #KevanParekh யார்?

01:27 PM Aug 28, 2024 IST | Web Editor
apple நிறுவனத்தின் புதிய cfo   இந்திய வம்சாளியான  kevanparekh யார்
Advertisement

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள கெவின் பரேக் ஓர் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவராவார். அவர் யார் என்பது குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

சர்வதேச அளவில் மிகவும் புகழ் பெற்ற செல்போன் உற்பத்தி நிறுவனம் ஆப்பிள். ஐபோன், லேப்டாப், ஐபேட்ஸ் என கேட்ஜெட் சந்தைகளில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை ஆப்பிள் நிறுவனம் நடத்தி வருகிறது.

ஆப்பிள் செல்போன்களை பொறுத்தவரை ஹைடெக் பாதுகாப்பு வசதியோடு, பிரைவசியிலும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை கொண்டது ஆகும். இதனால், ஐபோன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். பெரும்பாலும் விஐபிக்கள், பிரபலங்கள் பலரும் ஆப்பிள் பிராண்ட்களையே பயன்படுத்தி வருவதை காணமுடியும்.

இந்த நிலையில் ஆப்பிள் தனது புதிய தலைமை நிதி அதிகாரியாக (CFO) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கெவன் பரேக் (Kevan Parekh) என்பவரை நியமித்துள்ளது. தற்போது ஆப்பிளின் நிதி திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவின் துணைத் தலைவராக உள்ள கெவன் பரேக், 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் ஆப்பிள் நிர்வாகக் குழுவின் தலைமை நிதி அதிகாரியாகப் பொறுப்பேற்பார் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

யார் இந்த கெவன் பரேக்?

  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான கெவன் பரேக், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் எம்பிஏ., பட்டம் பெற்ற மின் பொறியாளர் ஆவார்.
  • ஆப்பிளில் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு, தாம்சன் ராய்ட்டர்ஸ் கார்ப்பரேஷன் (Thomson Reuters Corporation) மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் (General Motors) ஆகிய நிறுவனங்களில் பணியாற்றி பல்வேறு மூத்த தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
  • ஆப்பிள் நிறுவனத்தில் இவர் வேலைக்கு  சேர்ந்தபோது உலகளாவிய விற்பனை, சில்லறை வணிகம் மற்றும் சந்தைப்படுத்தல் நிதி ஆகியவற்றை வழிநடத்தினார்.
  • இதனைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு சந்தைப்படுத்தல், இணைய விற்பனை மற்றும் சேவைகள், பொறியியல் குழுக்களின் நிதி உதவி ஆகிய பிரிவுகளுக்கு தலைமை தாங்கினார்.
  • இதனைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தில் நிதி திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வின் துணைத் தலைவராகப் பணியாற்றி வரும் கெவன் பரேக் சுமார் 11 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்தின் நிதி தலைமைக் குழுவில் முக்கியமான உறுப்பினராக இருந்து வருகிறார்
  • அவரது கூர்மையான அறிவு மற்றும் நிதிநிலைகளில்  முடிவெடுக்கும் திறமை ஆகியவையே கெவன் பரேக்கை ஆப்பிளின் அடுத்த தலைமை நிதி அதிகாரியாக தேர்ந்தெடுக்க வழிவகுத்தது.

தற்போது ஆப்பிளின் புதிய தலைமை நிதி அதிகாரியாக (CFO) கெவன் பரேக் நியமிக்கப்பட்டுள்ளார்

Tags :
Advertisement