For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிக் பாஸ் வீட்டுக்கு வைல்டு கார்டு போட்டியாளர்களாக மீண்டும் செல்லும் 3 பேர் யார் தெரியுமா?

04:01 PM Nov 20, 2023 IST | Web Editor
பிக் பாஸ் வீட்டுக்கு வைல்டு கார்டு போட்டியாளர்களாக மீண்டும் செல்லும் 3 பேர் யார் தெரியுமா
Advertisement

பிக்பாஸ் வீட்டுக்கு வைல்டு கார்டு போட்டியாளர்களாக மீண்டும் செல்லும் 3 போட்டியாளர்கள் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

பிக் பாஸ் சீசன் 7 - ல் அக். 1-ஆம் தேதி தொடங்கியது.  இந்த சீசனில் கூல் சுரேஷ்,  பிரதீப் ஆண்டனி,  ரவீனா தாஹா,  வினுஷா தேவி,  விஷ்ணு விஜய்,  மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா,  யுகேந்திரன் வாசுதேவன்,  பவா செல்லத்துரை,  மணி சந்திரா,  அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.  மேலும், போட்டிக்கு இடையே வைல்டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி,  கானா பாலா,  அர்ச்சனா,  தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர்.

இதுவரை அனன்யா,  பவா செல்லதுரை,  விஜய் வர்மா,  வினுஷா தேவி,  யுகேந்திரன், அன்னபாரதி,  பிரதீப் ஆண்டனி,  ஐஷு மற்றும் கானா பாலா ஆகியோர் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டுக்குள் நுழையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் வைல்டு கார்டு போட்டியாளர்களாக களமிறங்கவுள்ளனர்.  அதன்படி, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 14 போட்டியாளர்களுக்கும், 3 வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கு நடைபெறவுள்ள போட்டியில் தோல்விபெறும் 3 பேர் பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வைல்டு கார்டு போட்டியாளர்களாக வினுஷா,  விஜய் வர்மா,  அனன்யா பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement