For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘#Thalapathy69’ படத்தின் நடிகர்கள் யார் யார்? படக்குழு புதிய அறிவிப்பு!

04:20 PM Oct 01, 2024 IST | Web Editor
‘ thalapathy69’ படத்தின் நடிகர்கள் யார் யார்  படக்குழு புதிய அறிவிப்பு
Advertisement

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ படத்தின் சக நடிகர்கள் குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணி முதல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. கோட் படத்தை தொடர்ந்து விஜய் தனது கடைசி படத்தில் இயக்குநர் வினோத்துடன் கைக்கோர்த்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தை கேவிஎன் புரொடக்ஸன்ஸ் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் முதல் தமிழ் படம் இதுவாகும். ‘தளபதி 69’ படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த நிலையில், ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசி திரைப்படத்தில் நடிக்கவுள்ள, கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு இன்று(அக். 1) முதல் அக். 3 வரை வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement