For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நமக்கு முன்பே தீபாவளி கொண்டாடும் நாடுகள் பற்றி தெரியுமா? எப்படி கொண்டாடப்படுகிறது?

02:29 PM Nov 09, 2023 IST | Web Editor
நமக்கு முன்பே தீபாவளி கொண்டாடும் நாடுகள் பற்றி தெரியுமா  எப்படி கொண்டாடப்படுகிறது
Advertisement

இந்தியாவைப் போல எந்தெந்த நாடுகளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது? எப்போது கொண்டாடப்படுகிறது என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இப்போது பார்க்கலாம்.....

Advertisement

இந்தோனேஷியா

இந்தோனேசியாவில் தீபாவளி ஒரு பெரிய விழா,  இங்கு இந்தியாவை விட 1.30 மணி நேரத்திற்கு முன்பே தீபாவளி பண்டிகை தொடங்குகிறது.  இந்த திருவிழாவின் போது இங்கு செய்யப்படும் அனைத்து சடங்குகளும் இந்தியாவைப் போலவே உள்ளன,  மேலும் தீபாவளியன்று பொது விடுமுறை என்பதால்,  மக்கள் தீபத் திருநாளன்று இரவு நேரங்களில் விளக்குகள் ஏற்றியும்,  பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுகின்றனர்.

மலேசியா

மலேசியாவில்,  இந்தியாவை விட 2.30 மணி நேரத்திற்கு முன்பே தீபாவளி பண்டிகை தொடங்குகிறது.  இங்கு ‘ஹரி தீபாவளி’ என்ற பெயரில் தீபாவளி பின்பற்றப்படுகிறது. இந்திய சடங்குகளிலிருந்து சற்று வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது.  மக்கள் காலையில் எண்ணெய் குளியலுடன் நாளை தொடங்கி,  பின்னர் பிரார்த்தனை செய்ய கோயில்களுக்கு செல்கிறார்கள்.  மலேசியாவில் பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால்,  இங்குள்ள மக்கள் இனிப்புகள்,  பரிசுகள் மற்றும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டு இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

பிஜி

பிஜி தீவை பொறுத்தவரை இந்தியாவை விட 6.30 மணி நேரத்திற்கு முன்பே தீபாவளி பண்டிகை தொடங்குகிறது.  பிஜியில் இந்தியர்கள் அதிக அளவில் இருப்பதால், தீபாவளி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. மேலும் தீபாவளியன்று பொது விடுமுறை என்பதால், மக்கள் இனிப்புகளை ஏற்பாடு செய்வது, பரிசுகளை பரிமாறிக்கொள்வதன் மூலமும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

மொரிஷியஸ்

மொரிஷியஷில் இந்தியாவை விட 1.30 மணி நேரத்திற்கு பிறகு தீபாவளி பண்டிகை தொடங்குகிறது.  மொரீஷியஸில் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட இந்துக்கள் 50 சதவீதம் என்பதால், தீபாவளி மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.  மக்கள் தங்கள் வீடுகளின் முன் களிமண் எண்ணெய் விளக்குகளை வைப்பார்கள், இந்த நேரத்தில் தீவு தேசம் ஒரு வண்ண ஒளி நிலமாக மாறும்.

இலங்கை

இலங்கை மக்களும் தீபாவளியை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்,  மேலும் தீபாவளி இலங்கையில் மிகவும் விரும்பப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும்.  இந்த பண்டிகை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால்,  இது ஒரு பொது விடுமுறை தினமாகும்.  தீபாவளியன்று மக்கள் சிறிய விளக்குகளை ஏற்றியும், தீபாவளிக்கென பிரத்யேக இனிப்பு வகைகள் செய்தும் கொண்டாடுகின்றனர்.

நேபாளம்

நேபாளத்தில்  ‘திஹார்’ என்று அழைக்கப்படும் தீபாவளி பண்டிகையை மிகவும் உற்சாகத்துடன் மக்கள் கொண்டாடுகின்றனர்.  தீபாவளி பண்டிகையில் பரிசுகளை பரிமாறிக் கொள்வது மற்றும் வீடுகளை விளக்குகளால் அலங்கரித்தும், லட்சுமி தேவிக்கு பிரார்த்தனை செய்தும் மக்கள் மகிழ்கின்றனர்.  அஸ்லோ, தசைனுக்குப் பிறகு நேபாளத்தின் இரண்டாவது பெரிய திருவிழா தீபாவளியாகும்.

 சிங்கப்பூர்

சிங்கப்பூரில் இந்தியாவை விட 2.30 மணி நேரத்திற்கு முன்பே தீபாவளி கொண்டாட்டம் தொடங்குகிறது.  சிங்கப்பூரின் ‘லிட்டில் இந்தியா’ பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தீபாவளி கொண்டாட்டங்கள் துவங்கியதால்,   அப்பகுதி உற்சாகத்துடன் காணப்படுகிறது.

கனடா

கனடாவில் இந்தியாவை விட 10.30 மணி நேரத்திற்கு பிறகு தீபாவளி பண்டிகை தொடங்குகிறது.  கனடாவில் அதிக அளவில் பஞ்சாப் மக்கள் வசிக்கிப்பதால் இங்கு 3வது அதிகாரப்பூர்வமாக மொழியாக பஞ்சாபி உள்ளது.  இதனால் தீபாவளி இங்கு ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

தாய்லாந்து

தாய்லாந்தில் தீபாவளி  ‘லாம் கிரியோங்’ என்று கொண்டாடப்படுகிறது,  மேலும் இங்கு தீபாவளி பண்டிகை இந்தியாவை போன்று உள்ளது.  இது தாய் நாட்காட்டியின் படி 12 வது மாதத்தின் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது.  அங்கு பிரமாண்டமான வானவேடிக்கைகள் வெடித்து மக்கள் கொண்டாடுகின்றனர்.

இதே போன்று நியூசிலாந்தின் ஆக்லாந்து, அமெரிக்காவின் சான் ஆன்டானியோ பகுதிகளிலும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே தீபாவளி கொண்டாட்டம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

Tags :
Advertisement