தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது? எந்தெந்த தொகுதிகளில் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது? முழுவிவரம் இதோ!
தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் வாக்கு பதிவு சதவீதம் அதிகரித்த நிலையில், ஒரு சில தொகுதிகளில் கடந்த தேர்தலை விட குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நேற்று தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் நேற்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.
சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்ற நிலையில் 69.46% வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 39 தொகுதிகளில் ஒரு சில தொகுதிகளில் மட்டும் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை விட நேற்று நடைபெற்ற தேர்தலில் அதிகமாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதில் குறிப்பிடத்தகுந்த வகையில் அதிகமாக வாக்குச்சதவீதம் பதிவான தொகுதிகளை பார்க்கலாம்.
வாக்கு சதவிகிதம்https://t.co/WciCN2SiwX | #Election2024 | #2024Election | #Elections2024 | #LokSabhaElections2024 | #ElectionsWithNews7Tamil | #ElectionCommission | #Kallakurichi | #Salem | #Villupuram | #Vellore | #Coimbatore | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/B9byAxgMPI
— News7 Tamil (@news7tamil) April 20, 2024
கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரித்த தொகுதிகள்
2019 2024
கள்ளக்குறிச்சி - 78.77 79.25
சேலம் - 77.86 78.13
விழுப்புரம் - 74.56 76.47
வேலூர் - 71.32 73.42
கோயம்புத்தூர் - 63.6 64.81
வாக்கு சதவிகிதம்https://t.co/WciCN2SiwX | #Election2024 | #2024Election | #Elections2024 | #LokSabhaElections2024 | #VotingPercentage |#ElectionsWithNews7Tamil | #ElectionCommission | #Kallakurichi | #CentralChennai | #Thoothukudi | #Tuticorin | #Sivagangai | #Theni |… pic.twitter.com/ULOQoPk38x
— News7 Tamil (@news7tamil) April 20, 2024
கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு குறைந்த தொகுதிகள்
2019 2024
மத்திய சென்னை - 58.95 53.91
தூத்துக்குடி - 69.43 59.96
சிவகங்கை - 69.87 63.94
தேனி - 75.17 69.87
நாகப்பட்டிணம் - 76.88 71.55