இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று (03-12-2025) வடதமிழக – புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை 17.30 மணிஅளவில், வடதமிழக பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, இன்று (04-12-2025) காலை 08.30 மணி அளவில் மேலும் வலுவிழந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், நீலகிரி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.