காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இது தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிக்க்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று, தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் இன்று கரையை கடக்க கூடும். மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தென்காசி, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.