Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை சுற்றுவட்டாரத்தில் காலை 10 மணிவரை எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு?

08:07 AM Nov 26, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை சுற்றுவட்டாரத்தில் காலை 10 மணிவரை எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த (தீவிர) காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் மிக கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நேற்றிரவு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது.

ஓரிடு இடங்களில் கனமழை பெய்துள்ளது. இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Climatenews7 tamilrain alertRain Updates With News7 TamilRainUpdatesWeatherWeather Update
Advertisement
Next Article