For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'கூலி படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போது..?' வெளியானது அப்டேட்!

நடிகர் ரஜினி மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகிறது.
08:05 PM Jul 28, 2025 IST | Web Editor
நடிகர் ரஜினி மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகிறது.
 கூலி படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போது     வெளியானது அப்டேட்
Advertisement

வேட்டையன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் 'கூலி'. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். விஜயின் லியோ திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கும் திரைப்படம் இதுவாகும். ரஜினி-லோகேஷ் காம்போ முதல் முறை சேர்ந்திருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாக்கியுள்ளது.

Advertisement

மேலும் இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா என பான் இந்தியா நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளனர். மேலும் அனிருத் ரவிச்சந்திரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஆகஸ்ட் 14ம் தேதி கூலிப் படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகள் தீவரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அனிருத் இசையில் கூலி' படத்தில் இடம் பெற்றுள்ள சிக்கிடு, மோனிகா மற்றும் பவர் ஹவுஸ் பாடல்கள் வெளியாகி மக்களால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் 'கூலி' படத்தின் இசை வெளியீட்டுவிழா ஆகஸ்ட் 2ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

https://x.com/sunpictures/status/1949825027735724348

Tags :
Advertisement