Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘கூலி’ படத்தின் டீசர் எப்போது ரிலீஸ்? வெளியான தகவல்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தின் டீசர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
09:38 AM Mar 04, 2025 IST | Web Editor
Advertisement

‘வேட்டையன்’ படத்தினை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கூலி'. ரஜினிகாந்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், கிஷோர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார்.

Advertisement

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத் மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மீதமிருந்த படப்பிடிப்பு பணிகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த படமானது ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், படத்தின் டீசர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற மார்ச் 14ம் தேதி டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது.

Advertisement
Next Article