‘ரெட்ரோ’ படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? வெளியான அப்டேட்!
நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது, அவரது 44-வது படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு ‘ரெட்ரோ’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை 2டி மற்றும் ஸ்டோன் பெஞ்ச் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் ஆக்சன் கலந்த காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
For My Boys #AnbanaFans 🙂❤️#Kanimaa
A @Music_Santhosh 🔥 🔥 Coming on 21st March #Retro#LoveLaughterWar #RetroFromMay1 @Suriya_offl @hegdepooja@2D_ENTPVTLTD @stonebenchers pic.twitter.com/HCYyY5YAgO— karthik subbaraj (@karthiksubbaraj) March 19, 2025
சமீபத்தில் இப்படத்தின் டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் காமிக்ஸ் வடிவில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த பாடல் வருகிற 21-ந் தேதி வெளியாக உள்ளது. இப்படம் வரும் மே 1ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.