Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'மாமன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

சூரி நடிப்பில் உருவான மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
09:07 PM May 30, 2025 IST | Web Editor
சூரி நடிப்பில் உருவான மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement

காமெடியனாக தனது கரியரை தொடங்கி தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருப்பவர்தான் நடிகர் சூரி. இவர், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், வெண்ணிலா கபடிகுழு உள்ளிட்ட பல படங்களில் காமெடியான நடித்துள்ளார். குறிப்பாக சிவகார்த்திகேயன், சூரி இணைந்து நடித்த படங்கள் இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் ஆக உள்ளது.

Advertisement

இதையும் படியுங்கள் : “அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்..” – Chief ஹேப்பினஸ் ஆஃபீசராக கோல்டன் ரெட்ரீவர் நியமனம் – எங்கு, என்ன வேலை தெரியுமா?

காமெடியனாக நடித்து வந்த சூரி வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து, ‘கருடன்’ படத்தில் இவரின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் விட்டனர். அந்த அளவிற்கு நடிப்பில் கலக்கி இருந்தார். இனிமேல், ஹீரோவாக மட்டுமே நடிங்கள் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து, ‘கொட்டுக்காளி’ , ‘விடுதலை பாகம் 2’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மாமன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் கடந்த மே 16ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியான 15 நாட்களில் ரூ.30 கோடி வசூலித்துள்ள்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படம் ஜூன் 13-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Aishwarya LekshmicinemaMaamanmovienews7 tamilNews7 Tamil UpdatesottPrasanth PandiyarajSoori
Advertisement
Next Article