ஜி.வி.பிரகாஷின் 'Blackmail' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது? வெளியான அப்டேட்!
கடந்த 2006-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘வெயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ் குமார். அதனைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு வெளியான 'டார்லிங்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 'பேச்சுலர்' படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதையும் படியுங்கள் : மியான்மர் நிலநடுக்கம் – உயிரிழப்பு எண்ணிக்கை 100 ஆக உயர்வு?
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'கிங்ஸ்டன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ், மு.மாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார்.
#Blackmail watch out #firstlook Tomorrow @ 6.03 pm@gvprakash @jds_filmfactory @thebindumadhavi @SamCSmusic @mumaran1 @SureshChandraa @AbdulNassaroffl @Donechannel1 pic.twitter.com/q5edJydJH6
— Cinema Times (@CinemaTimesOff) March 28, 2025
இப்படத்திற்கு 'Blackmail' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிந்து மாதவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6.03 மணிக்கு வெளியாகிறது.