ஜி.வி. பிரகாஷின் ‘பிளாக்மெயில்’ எப்போது ரிலீஸ்? வெளியான அப்டேட்!
கடந்த 2006-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘வெயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ் குமார். அதனைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டார்லிங்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இதையும் படியுங்கள் : இந்த வாரம் வெளியான 5 படங்கள்… எந்த படம் அருமை, எது சுமார்?
கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ், மு.மாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘பிளாக்மெயில்’ என பெயரிடப்பட்டுள்ளது.
We are happy to announce our 1st production movie #Blackmail A Gripping Thriller Drama Confirmed as August 1st Release#BlackmailfromAug1@gvprakash @jds_filmfactory @sanlokesh @SamCSmusic @gokulbenoy @thebindumadhavi @linga_offcl @thilak_ramesh @teju_ashwini_ @haripriyaaIsai pic.twitter.com/4qjSiDLxyY
— JDS FILM FACTORY (@jds_filmfactory) June 28, 2025
இப்படத்தில் பிந்து மாதவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். சமீபத்தின் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் ஆகஸ்டு 1ம் தேதி வெளியாகிறது.